Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தஸமஹாவித்யா | Dasa Maha Vidya

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”தஸமஹாவித்யா”

முந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், அது ஒரு ஆராதனை பாடலாக இருந்தது.

இன்று, தஸமஹாவித்யா மந்திர ரஹஸ்யத்தை கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் (March 24, 1775 – October 21, 1835) எப்படி மத்யமாவதி ராகத்தில், ரூபக தாளத்தோடு அருளியிருக்கிறாரெனில்…

ஆராதயாமி ஸ்ததம்; கம் கணபதிம்; ஸௌ: சரவணம், அம் ஆம் ஸௌ: த்ரைலோக்யம், ஐம் க்லீம் ஸௌ: ஸர்வாஸாம்; ஹ்ரீம் க்லீம் ஸௌ: ஸ்ங்க்ஷோபணம், ஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: ஸௌபாக்யம், ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வார்த்தம்; ஹ்ரீம் க்லீம் ப்லேம் ஸர்வ ரக்ஷாம்; ஹ்ரீம் ஸ்ரீம் சௌ: ரோக ஹரம், ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: ஸர்வ ஸித்திதம், க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – ஸர்வானந்தம்; ஸ்ரீ நாதானந்த குரு பாதுகம் பூஜயே சதா: சிதானந்த நாதோஷம், காமேஷ்வராங்க நிலயாம், வைஸ்ரவண வினுத தனினீம் கணபதி குருகுஹ ஜனனீம் நிரதிஸய ஸுப மங்களாம், மங்களாம் ஜய மங்களாம் என்று சமஷ்டி சரணத்திலும்,

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம், மஹா த்ரிபுர ஸுந்தரீம் லலிதா பட்டாரிகம் பஜே | விதேஹ கைவல்யம் ஆஸு ஏஹி தேஹி மாம் பாஹி || என்று பல்லவியிலும் சொல்கிறார்.

இதன் விளக்கம்:

கம் பீஜத்தினால் கணபதி சித்தியும்;

ஸௌ(ம்): எனும் பீஜத்தினால சரவணபவனின் அருளும்,

அம் ஆம் ஸௌ: எனும் மூன்று அக்ஷரத்தில் த்ரைலோக்ய வசியமும்,

ஐம் க்லீம் ஸௌ: என்பதால் ஸர்வ இஷ்டார்த்தமும்;

ஹ்ரீம் க்லீம் ஸௌ: இது சர்வ ஸ்ங்க்ஷோபணியாகவும்,

ஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: எல்லா ஸௌபாக்யம் அருள வல்லதாகவும்,

ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வ புருஷார்த்தத்தையும்,

ஹ்ரீம் க்லீம் ப்லேம் என்பது ஸர்வ ரக்ஷையும்;

ஹ்ரீம் ஸ்ரீம் சௌ: என்பது சர்வ ரோக நிவாரணியாகவும்,

ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: என்பது ஸர்வம் ஸித்திதம் என்றும்,

க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – எனும் ஷோடஸி, ஸர்வானந்த ப்ரதாயகம் என்று ப்ரயோக அனுபவத்தோடு சொல்கிறார். ஏனெனில் அவரும் ஒரு மஹா சாக்தர் அல்லவா!

இங்கு ஸ்வாமி விவேகானந்தரின் உரையே நினைவில் நிற்கிறது. “Society does not go down because of the activities of criminals, But because of the inactivities of the good people.”

ஆதி ஸ்ங்கர பகவத்பாதாள் எப்படி இவற்றை உறைத்தார் என அடுத்த பதிவில் பார்ப்போமா!

இதுபோன்று இன்னமும் எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.

நம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.

எண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த சேவை முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

 ***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, WhatsApp:- +91 96774 50429

***

This entry was posted in தஸ மஹா வித்யா, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.