Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | கணபதியும் குண்டலினியும் | Ganapathi and Kundalini

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

தேவி காமாக்ஷி அம்மன்

தேவி காமாக்ஷி அம்மன்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

”கணபதியும் குண்டலினியும்”

 

எண்ணிய எண்ணியாங்கு எய்து கண்ணுதல்
பவள மால் வரை பயந்த
கவள யானையின் கழல்பணிவோரே.

கணாதிபன் சன்னிதியில் தலையில் ஏன் குட்டிக் கொள்ளவேண்டும்?

மூலக்கனல் என்றும் சொல்லப்படும் சுஷும்னா நாடி, அடிவயிற்றின் கீழ் அதாவது முதுகு தண்டின் முடிவில், ஓம்கார ரூபமாய் அமைந்து செயல் படுகிறது.  இதை தட்டி எழுப்பி, செயல்பட செய்து, மேல் நோக்கி ஸஹஸ்ரார மண்டலம் வரை செலுத்தி, சிரஸிலிருக்கும் அமிர்தத்துடன் கலந்து அவ்விடமே நிலை நிறுத்திக்கொண்டால், மனிதன் தன் நிலை மறந்து, பரமத்துடன் ஐக்கியப்பட்டு நிற்பான் எனவும், பேரானந்தத்தை அடைவான் என்றும் சொல்லப்படுகிறது.

இதை செயல்படுத்த மிக அதிக அளவு உஷ்ணம் உண்டு செய்யவேண்டும். இதற்கு மனதை ஒரே நிலையில் நிலை நிறுத்தி ஐக்கியப்படுத்த நெடும் நாம ஜப, தப, ஹோமாதிகள் செய்யவேண்டும் எனவும், அதெற்கெனவே நமது முன்னோர்கள், ரிஷிகள், சாஸ்திர விற்பன்னர்கள், தாவிர வர்க்கத்திலேயே மிக உஷ்ணமான அறுகு, எருக்கு, வன்னி பத்ரங்கள், விநாயகனுக்கு உகந்தது என வகுத்து, அகந்தை, ஆணவம் அழிந்தது என தலையில் குட்டிக்கொள்வதையும், தோப்புக்கரணம் போடுவதையும் வழக்கிலிருத்தினர்,

தோப்புக்கரணம் போடுவதால், மனித மூளையும் நரம்பு மண்டலமும் தூண்டப்பட்டு, அத்னால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது எங்கின்றன ஸாஸ்திரங்கள், ஆகையினாலேயே, முற்கால பள்ளிகளில், தவறு செய்யும் மாணாக்கர்களுக்கு, தோப்புக்கரணம் போடுவது தண்டனையாயிற்று.

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ண:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணத்யக்ஷா பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

என பக்தியுடன் பாராயணம் செய்ய, பாங்குடனே வாழ்ந்திடுவாய் பாரினிலே!

சுபம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in கணபதியும் குண்டலினியும், குண்டலினி, Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.