Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ லலிதா ஸௌபாக்ய ஸ்தோத்திரம் | Sri Lalitha Soubhagya Sthothram

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

தேவி லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம் எனும் ஓர் அரிய நூலில் காணப்படும் ஒரு மஹோன்னத பொக்கிஷம் இந்த “ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்”.  இதனை காமேஷ்வரனான சிவனே காமேஷ்வரியான தேவிக்கு அருளியதாக ஸ்ரீ பரசுராமருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேஸிக்கிறார். இதிலுள்ள நாமாவளிகள் அனைத்தும் “ஸ்ரீ ஸௌபாக்ய வித்யா” மந்திரத்தை முன் வைத்து அமைக்கப்பட்டது.

“ஸ்ரீ வித்யா” என்ற அம்பிகையின் ஆராதனையை உபாஸிப்பவர்களுக்கு, பஞ்ச தஸாக்ஷரியிம் அதிலிருந்து பெறப்பட்ட ஸ்ரீ லலிதா த்ரிசதியும் இன்றியமையாதவை.  ஸ்ரீ வித்யா பூஜாவிதிகளை கடைப்பிடிக்க மிகக்கடுமையான நியம, நிஷ்டைகள் மிக அவசியம். ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை கடைப்பிடித்து, உய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் எழிதில் கிட்டாது.  அம்பிகையே விரும்பினால் தான், இம்மார்கம் வயப்படும் என்பது சான்றோர் வாக்கு.

அப்படிப்பட்ட அம்பிகையை எல்லோரும் வணங்கி, உய்யவே ஐயன் நந்தி வாஹனன், ஸ்ரீ தத்தர் – ஸ்ரீ பரசுராமர் மூலமாக உலகிற்கு இதை உறைத்தார் என்பது சான்றோர் கருத்து.

 விமர்ஸ ப்ரணவங்கள்: ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸௌ:

இதில் பாலா திரிபுரசுந்தரியின் மூலம் “ஐம் க்லீம் ஸௌ:” – இதை பஞ்சதசியின் ஒவ்வொரு கூடத்தின் முன்னும் சேர்த்தால் கிடைப்பது, “ஸௌபாக்ய வித்யா”. யாதெனில், “ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம், க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம், ஸௌ: ஸ க ல ஹ்ரீம்” எனும் ஸக்தி மிகு 18 அட்சர மந்திரம். இந்த மந்திரத்தை உபாஸிக்க, கடினமான அனுஷ்டானம் தேவை. அனுஷ்டிக்க விருப்பமுள்ளவர்கள், எம்மை தொடர்பு கொள்ளலாம்.

க ஏ ஈ ல, ஹ ஸ க ஹ ல, ஸ க ல என்பது, பீஜங்களையும், சிவ சக்தி பீஜமான ஹ்ரீம் ஐயும் எடுத்துவிட்டால் நிற்பது, இவற்றுள் சக்தி அட்சரங்களை, மறு முறை ப்ரயோகிக்காமல் இருந்தால் அமைவது, “க ஏ ஈ ல ஹ ஸ க ஹ க” என்ற நவாக்ஷரீ அமைகிறது. இரண்டாவது மூன்றாவதாக வரும் க வை அ என்று மாற்றியும், இரண்டாவதாக வரும் ஹ வை ர என மாற்றவும் வேதங்களால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாரு இரண்டாவது வகை நவாக்ஷரி “க ஏ ஈ ல ஹ ஸ அ ர அ” என அமைகிறது.

இதனை சிறிது திருத்தி எழுதினால் “க அ ஏ ஈ ல ஹ ர அ ஸ” என்ற நவாக்ஷரி கிடைக்கிறது. இந்த நவாக்ஷரியை வைத்தே ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் 12 நாமாவாக 108 நாமம் உள்ள சொபாக்ய அஷ்டோத்திர சத நாமாவளி ஸ்தோத்ரம் அமையப்பெற்றுள்ளது.

இவ்வாறு பஞ்சதசியிலிருந்து பெறப்பட்ட நவாக்ஷரி ஸ்தோத்ர மாலை அல்லது அஷ்டோத்திரம், பாராயணம் செய்யும் பொழுது, அன்னையின் பேரருளால், பஞ்ச தஸி மந்திரத்தின் பெரும் பலன், பஞ்சதசியின் கடின ஆராதனை முறையில்லாமல், சாதாரண ஆராதனை முறையிலேயே கிட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த ஆராதனையை இருபாலரும் அம்பிகையின் முன்னே, வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ, கூட்டு வழிபாடாகவோ, அல்லது தீப வழிபாடாகவோ செய்யலாம். வெள்ளிதோரும் வாக்கு, மனம், உடல் சுத்தியுடன் இதை தொடர்ந்து பாராயணம் செய்ய, வியக்கத்தகு சர்வதோமுக பலன் தரும் ஒரு ரஹஸ்ய தேவி உபாஸனை முறை இது.

இங்கு, த்யான ஸ்லொகமும், மாலா ஸ்தோத்திர மந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான பூஜை முறை பின்னர் இவ்வலைப்பூவில் இடப்படும்.

த்யானம்.

வந்தே காமகலாம் திவ்யாம் கருணாமய விக்ரஹாம் |
மஹா காமேஷ மஹிஷீம் மஹா திரிபுரசுந்தரீம் ||

மாலா ஸ்தோத்திர மந்திரம்

ஓம் காமேஷ்வரீ காமசக்தி: காம ஸௌபாக்ய தாயினி  |
காமரூபா காமகலா காமினி கமலாஸனா || – 1

கமலா கல்பனாஹீநா கமநீய கலாவதி |
கமலா பாரதி ஸேவ்யா கல்பிதாஸேஷ ஸம்ஸ்க்ருதி || – 2

அநுத்தராநகா அனந்தா அத்புதரூபா அநலோத்பவா |
அதிலோக சரித்ராதி ஸுந்தரீ அதிஸுபப்ரதா || – 3

அகஹந்த்ரீ அதிவிஸ்தாரா அர்ச்சந துஷ்ட்ட அமிதப்ரபா |
ஏகரூபா ஏகவீரா ஏகநாதா ஏகாந்தார்ச்சன ப்ரியா || – 4

ஏகைக பாவதுஷ்டா ஏக ரஸா ஏகாந்த ஜனப்ரியா |
ஏதமாந-ப்ரபவைதத் பக்த-பாதக நாஸினீ || – 5

ஏலாமோதஸுகா ஏனோத்ரி சக்ராயுத ஸம்ஸ்திதி: |
ஈஹாஸூன்யா ஈப்த்சிதேஸாதி ஸேவ்யா ஈஸான வராங்கநா: || – 6

ஈஸ்வராஜ்ஞாபிகா ஈகாரபாவ்யேப்ஸித பலப்ரதா |
ஈஸானாதிஹரேக்ஷேக்ஷத் அருணாக்ஷீஸ்வரேஸ்வரீ || – 7

லலிதா லலனாரூபா லயஹீநா லஸத்தநு: |
லயசர்வா லயக்ஷோணி:லயகர்த்ரீ லயாத்மிகா || – 8

லகிமா லகுமத்யாட்யா லலமாநா லகுத்ருதா |
ஹயாரூடா ஹதாமித்ரா ஹரகாந்தா ஹரிஸ்துதா || – 9

ஹயக்ரீவேஷ்டதா ஹாலா ப்ரியா ஹர்ஸமுத்பவா |
ஹர்ஷணா ஹல்லகாபாங்கீ ஹஸ்த்யந்தைஸ்வர்ய தாயினீ || – 10

ஹலஹஸ்தார்ச்சித-பதா ஹவிர்தாந ப்ரஸாதினீ |
ராமா ராமார்ச்சிதா ரஜ்ஞீ ரம்யா ரவமயீ ரதி: || – 11

ரக்ஷிணீ ரமணீ ராகா ரமணீ மண்டலப்ரியா |
ரக்ஷிதாகில லோகேஸா ரக்ஷோகண நிஷூதினீ || – 12

அம்பாந்தகாரிண்யம்போஜ ப்ரியாந்தக பயங்கரீ |
அம்புரூபாம் புஜகராம் புஜ ஜாத வரப்ரதா || – 13

அந்த: பூஜா ப்ரியாந்தஸ்த ரூபிண்யந்தர்-வசோமயீ |
அந்தகாராதி வாமாங்க ஸ்திதாந்த ஸுகரூபிணீ || – 14

ஸர்வக்ஞா ஸர்வகா ஸாரா ஸமாஸமசுகா ஸதீ |
ஸந்ததி: ஸந்ததா ஸோமா ஸர்வா ஸாங்க்ய ஸநாதநீ || – 15

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, WhatsApp:- +91 96774 50429

This entry was posted in ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம், and tagged , , , , . Bookmark the permalink.

5 Responses to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ லலிதா ஸௌபாக்ய ஸ்தோத்திரம் | Sri Lalitha Soubhagya Sthothram

 1. vinu says:

  தங்களுக்கு அநேக நமஸ்காரங்கள். சக்தி வழிபாடு குறித்துத் தங்களைத் தொடர்பு கொள்ள விருப்பம். தங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைப்பேசி எண் கிடைக்குமா? எனது மின்னஞ்சல் முகவரி – vinu5639@gmail.com. நன்றி.

  • ஐய்யா!

   தங்களது பதிவிற்கு நன்றி!
   தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு, எனது மின்னஞ்சலிலிருந்து வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளேன்.
   தொடர்புகொள்வீராக.

 2. devi says:

  sir this is my emil address v.devi3@gmail.com
  pls send your email address for me

 3. Jeyakumar says:

  பஞ்சதசியிலிருந்து பெறப்பட்ட நவாக்ஷரி ஸ்தோத்ர மாலை அல்லது அஷ்டோத்திரம் என்னும் தேவி பூஜை முறையை எனுக்கு அனுப்ப இயலுமா ,மிக்க நன்றி (தங்கள் வலை பூவை தற்போதுதான் படித்தேன்)

Comments are closed.