Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அடிப்படைகள்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

சக்கிரஙகள் - அடிப்படை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“அடிப்படைகள்”

பொதுவாக, பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டது, கோவிலுக்கு போக சொன்னார், போனேன், அர்ச்சனை செய்தேன், ஒரு மந்திரத்தை சொல்ல சொன்னார்கள், சொல்லிக் கொண்டுமிருக்கிறேன், அப்படி விஷேஷமாக எதுவும் நடக்கவில்லை என்பதே!

அவர்களுக்கும், தத்துவத்தை எளிதாக சொல்வதற்கும் இக்குறிப்பு:

மந்திரங்கள் என்பது ஒலி அலைகள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே! ஆயின் அவை எவ்வாறு மனிதனின் உடலில், உள்ளத்தில், சுற்றுசூழலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை சிறிது பார்ப்போமா!

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை கவனியுங்கள்.

ஈரேழு பதினாலு உலகம் என புராணங்கள் கூறுவது எதை?  கூர்ந்து கவனித்தீர்கள் எனில், மூலாதார சக்ரம், அல்லது பூமி தத்துவம் என்பது ஒரு மனிதனின் ஆசன வாயிற்க்கும் இந்திரிய உறுப்புக்கும் நடுவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை குறிப்பிட்டே, பத்மாஸனத்தில் இருந்து ஜெபம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அப்பொழுது தான் மூலாதாரம் தூண்டப்படும் – இதை சிறிது அலசுவோமா!

ஒரு மனிதன் நிற்கும் பொழுது, அவனது மூலாதாரம், சுமார் 2 ½ அடி உயரத்தில் உள்ளது. மூலாதாரம் என குறிப்பிட்ட பகுதிக்கும், பூமிக்கும் நடுவே உள்ள தூரத்திலேயே, அதள, விதள, சுதல தலாதள, ரசதள, மஹா தள, பாதாளம் எனும் 7 லோகங்கள் உள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கால் விரல் நுனியிலிருந்து, மூலாதாரம் வரை.

அடுத்ததாக, மூலாதாரத்திலிருந்து ஏன் ஆரம்பிக்க வேண்டும்? என்பது.

இன்றைய விஞ்ஞானம், நேற்றைய கூற்றை உரைக்கிறது. ஒருவர் வலது கை பழக்கம் உள்ளவர் எனில், அவரது இடது மூளை, சிறிது அதிகமாக பணியெடுக்கிறது, இடது கையெனில், வலது மூளை சிறிது அதிகமாக பணியெடுக்கிறது என்று.

நமது முன்னோர்கள், இதற்கு ஓரு படி மேலே போய், உடலையும், உயிரையும், மூளையையும், மனத்தையும் இயக்கும் முறையை ப்ராணாயாமம் என்று உறைத்து, அதன் மூலம் மூலாதாரத்தில் உயிர் நிலையை இயக்கும் மர்மத்தினை நாடி-சுத்தி என்று அழைத்தனர். இதன் ரகசியமாவது, ப்ராணாயாமம் ஆரம்பமாவது, காலியான நுறை ஈரலில், அதாவது மூச்சை முழுவனுமாக வேளியே விட்டு, இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சிறிது நிறுத்தி, வலது நாசி வழியாக வெளியே விடவும் என்றும், பின்னர், வலது நாசி வழியாக உள்ளே இழுத்து பின் இடது நாசி வழியாக வெளியே விட்டால் ஒரு சுற்று என்றும், ஒரு சாதகன் இம்மாதிரி 21 சுற்று நாடி சுத்தி செய்த பின்னரே, மற்ற விதிக்கப்பட்ட அனுஷ்டான முறைகளை அனுசரிக்க வேண்டும் என்றனர்.  இப்படி செய்யும் பொழுது, சில மந்திரங்கள் / சொற்தொடரையும் சேர்த்து செய்யப்பணித்தனர்.  இதன் பயனானது, உடலில், ப்ராணவாயு அதிகம் சேரவும், கரியமில வாயு அல்லது, மனிதனின் ரத்தத்தில் கலந்து, காற்றோடும், சிறு நீரகத்தாலும், வெளியேற்றப்படும் மலினங்கள் சுலபமாக வெளியேற்றப்பட்டு, உடலில் உள்ள ரத்தம் சுத்தீகரிக்கப்படுகிறது.  மேலும், மூச்சை ஒரே சீறாக இழுத்து வெளியே விடுவதின் மூலம், வயிற்றுப்பகுதி அசைந்து கொடுப்பதால், வயிற்றில் உள்ள மலினமும் எளிதாக வெளியேற்றப்படுகிறது.  ப்ராண வாயு நிறைந்த ரத்தத்தினால் இதயத்தின் வேலை குறைக்கப்படுகிறது, அதன் காண், இதயம், மெதுவாக, அதே சமயம் முழுவதுமாக தனது கடமையை செய்கிறது.  காரணம், வயிற்றின் மலினமும், வயிற்றில் உள்ள காற்றும் கொடுக்கும் மேல் அழுத்தம் குறைவதாலும்.  இதனோடு, மூளைக்கு செல்லும் ரத்தம் அதிகமான ப்ராணவாயுவுடன் பாய்வதால், மூளைக்கு வேண்டிய ஆகாரம், சிறிது ரத்த ஓட்டத்திலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.  ஆகையால், மூளையும் அமைதியாக, தனது பணியை செவ்வனே செய்கிறது.

இவ்வகையாக நமது உடலின் இடா, பிங்களா, சுஷும்னா ஆகிய நாடிகள், சுத்தீகரிக்கப்படுகின்றது.

இப்படியாக, நமது அனுஷ்டானத்திற்கு முன், ஸ்தூல உடல் சுத்தீகரிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விஸ்தாரமாக பின்னர் உரைக்கப்படும்

 

–தொடரும்

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in அடிப்படைகள், ப்ராணாயாமம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Basics, Dasa Maha-Vidhya, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.