Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Homa | ஹோமங்கள்

ஹோமம்

ஹோமம்

ஆஸ்தீக பந்துகளுக்கு,

ஹைந்தவ திருவலம் கடந்த பல வருடங்களாக, அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும், விஷேஷ தினங்களிலும் லோக நன்மைக்காக பல ஹோமங்களை க்ரமத்துடன் கோவில்களில் சாமூஹிகமாக செய்து வருகிறது. அதனுடன் அந்தந்த தினங்களில் பெரிய அளவில் ஹைந்தவ திருவலம் அமைப்பினால் அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

இவை எல்லாவற்றிற்கும், விருப்பப்படுபவர் தம் பெயரில் இலவசமாக சங்கல்பம் செய்து கொள்ளலாம். பெயர், கோத்ரம், நட்சத்திரம், என்ன பலனை எதிர்பார்த்து என்ற விபரங்களை தனியாக மின்னஞ்சல் செய்யவும். சங்கல்பத்தில் தங்களது பெயர் மற்றும் விபரமும் இடம் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த சேவைக்கு எவ்வித கட்டணமும் பெறப்படுவதில்லை. பிரசாதமாக பஸ்மம், குங்குமம் அனுப்பபடும், பிரசாதம் பெற விரும்புபவர் அஞ்சல் அல்லது குரியர் செலவை ஏற்கவேண்டும்.

விருப்பமுள்ளவர் அன்னதானத்தில் சிலவை பகிர்ந்துகொண்டு பங்கேற்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆயினும் இது கட்டாயமல்ல என்பதையும் இங்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

எமது ஹோம க்ரமங்கள் சில:

ஸ்ரீ ருத்ர ஹோமம்

ஸ்ரீசக்ர ஹோமம் – ஸௌபாக்ய பஞ்ச தசீ + ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் + கட்கமாலா ஸஹிதம்.

ஸ்ரீ கல்பலதா கணபதி ஹோமம்,

ஸ்ரீ சரப – ப்ரத்யங்கிரா ஹோமம்,

ஸ்ரீ ம்ருத்யுஞ்செய + தன்வந்தரீ ஹோமம்,

ஸ்ரீ ஸ்வயம்வர பார்வதீ + சந்தான ப்ராப்தி ஹோமம்

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ + த்ருஷ்டி துர்கா ஹோமம் முதலியன.

ஆஸ்தீக அன்பர்கள் தேவைக்கிணங்க அவர்கள் விரும்பும் ஹோம கார்யங்களும் அவரவரின் சிலவில் நடத்தப்படுகின்றன.

ஆஸ்தீக அன்பர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற அன்புடன் அழைக்கும் – ஹைந்தவ திருவலம்.

 மேலும் விபரங்களுக்கு திரு. சிவன் T, (thiruvalamsivan [at] yahoo.com) அவர்களை தொடர்பு கொள்க.

This entry was posted in ஹோமங்கள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.