Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Kaliyum Dhasanum! | காளியும் தாஸனும்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

காளி

காளி

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“காளியும் தாஸனும்!”

காளியைத் திட்டும் தைரியம் யாருக்காவது உண்டா? சுட்டெரித்து விடமாட்டாளா என்று சந்தேகம் வரும். ஆனால், அவளையும் திட்டித் தீர்த்தான். ஒரு கவி. காளிதேவி, தன் அருளால் காளிதாசனை மாபெரும் கவிஞனாக்கினாள். அவர் போஜராஜனின் அரசவைப் புலவராக இருந்த போது, தண்டி, பவபூதி என்ற வேறு இரு கவிஞர்களும் கூட அவைப் புலவராக இருந்தனர். மூவருமே மிக உயர்ந்த கவித்துவம் பெற்றவர்கள். ஒரு சமயம், இம்மூவரில் யாருடைய புலமை உயர்ந்தது என்ற வாதம் ஏற்பட்டது. இதுபோன்ற சமயங்களில், தெய்வசந்நிதியில் தீர்ப்பு கேட்பது அரச நியதி, அன்றய காலங்களில். போஜராஜனும் காளி சந்நதிக்கு வந்தான். காளியிடம் தீர்வு கோறினான். தண்டியிடம் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் காளியின் குரல் அசரிரீயாகக் கேட்டது.

காளிதாசனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே அவருக்கு கோபம் வந்து விட்டது. அப்படியானால் என் திறமை என்னடி? என்று ஒருமையில் கோபமாகத் திட்டிவிட்டார். அப்போது,  மகனே காளிதாசா! அவசரக் குடுக்கையாக இருக்கிறாயே! நான் மற்றவர்களின் பாண்டித்யம் பற்றியே மெச்சினேன்.  “த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ஸம்சய” என்று உன்னைப் பற்றி சொல்வதற்குள் என்ன அவசரம்? என்றதும், காளிதாசர் அழுதே விட்டார். ஏன் அழுதார் தெரியுமா? அந்த ஸ்லோகத்தின் பொருள் தெரிந்தால், காளியின் கருணையைப் பார்த்து நீங்களும் ஆனந்தக்கண்ணீர் பெருக்குவீர்கள். ‘நீதானே நான், நீதானே நான், நீதானே நான் சந்தேகமில்லாமல்’ என்பதே அதன் பொருள். ‘நீயும், நானும் ஒன்றான பிறகு உனக்கு மிஞ்சிய புலவனேது’ என்றாளாம் காளி. அந்த அம்மனிடம் உங்களுடய இஷ்டார்த்தத்தை எடுத்துறையுங்கள், அம்பிகையும் கண்டிப்பாக அருளுவாள்!

சுபம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in காளியும் தாஸனும், Uncategorized and tagged , , , . Bookmark the permalink.