ஹைந்தவ திருவலம் | Haindava Thiruvalam | பிரதோஷ யந்த்ரம் | Pradosha Yanthram

நந்தீஸ்வர யந்திரம்!

பிரதோஷ மூர்த்தி

பிரதோஷ மூர்த்தி

நண்பர் ஒருவர் கூறியது, நாமும் செய்தோம், நற்பயன் அளிக்கிறது!

ஓம் நந்தீஸ்வராய நம: என்று கூறி ஆரம்பிப்போம்.

மத்தியில் (அரிசி மாவால் மட்டும், வேறு எதையும் உபயோகிக்காதீர்கள்) எழுதவும்.

அதை சுற்றி, இடது, வலது, மேல் மற்றும் கீழ் ‘ஓம்’ என்று எழுதவும்.

இதை உள்ளிருத்தி ஒரு வட்டம் இடவும்.  வட்டத்தின் வெளியே வட்டத்தை தொட்டு, ஒரு சதுரம் இடவும். வட்டத்திற்கு வெளியிலும், சதுரத்திற்கு உள்ளும் உள்ள இடைவெளியில் அல்லது போல் நான்கு மூலையிலும் இடவும்.

சதுரத்தின் வெளி மூலைகளிலும் ஒரு சூலம் வரையவும். சதுரத்தின் வெளியே, நான்கு மத்தியிலும் श्री என்றிடவும்.

கோடுகள் மற்றும் ஓம் அரிசி மாவிலும், யந்திர மத்தியில் இடப்பட்ட குங்கமத்திலும், श्री மஞ்சளிலும், சந்தணத்திலும் ஆகியிருத்தல் வேண்டும்.

இந்த யந்திரத்தின் மேல் 9 விதமான மலர்களை பிரதோஷ காலத்தில் வைக்கவும், துலுக்க மல்லி / சாமந்தி கூடாது. ஓன்பதில் ஒரு மலர் நந்தியாவட்டையாகிருத்தல் வேண்டும்.

வழிபட, அர்ச்சனைக்கு சிவன், காளி, கணபதி, சுப்ரஹ்மண்யர், நந்தி அஷ்டோத்திரம் ஒன்றை உபயோகிக்க. அரிசி, கடலைப்பருப்பு / பச்சை பயிர் பாயசம் தேங்காய் ஓட்டில் இட்டு நிவேதிக்க, பின்னர் அதை வீட்டின் மேல் வைத்துவிடல் வேண்டும்.  இதனால் ப்ரதோஷ பூஜாபலன் முழுமையாக கிட்டும்.

 

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956, whatsapp:96774 50429

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.