Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸாக்தம் | Saktham

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

பாலாம்பிகை

பாலாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“சாக்தம்”

சாக்த முறையை மிகத்தீவிரமா கடைபிடிக்கறவர்களுக்கு சாக்தர்கள் என்று பெயர். மாத்ரு பாவம் இவர்களிடம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எல்லா வஸ்துவும் இவர்களுக்கு அம்பாளாவே தெரியும். அவர்களுக்கு கிடைக்கும் எல்லா ஐஸ்வர்யமும் அம்பாள் போட்ட பிச்சை! எனும் எண்ணம் அழியாமல் இருக்கும். ஒரு வசனம் கூட உண்டு “உண்ணும் உணவு, உடுக்கும் உடை, பருகும் நீர், மெல்லும் வெற்றிலை எல்லாம் அவள் இட்ட பிச்சை” என்று பெருமையாக  சொல்லுவர்.

இந்த அம்மா இருக்காளே அவளுக்கு ரொம்ப தாராளமான மனசு, குழந்தைகள் கேட்டது சாதாரணமான பிற வஸ்துவா இருந்தாலும் அவள் பரவஸ்துவையே சர்வசாதாரணமா “இந்தா கோழந்தை! வெச்சுக்கோ சரியா!” என்று குடுத்து விடும் இளகின மனசு. ஒரு அசட்டுப் பிள்ளை “இங்க கொஞ்சம் பாரேன் அம்மா!-ன்னு தொடர்ந்து கேட்டுண்டே இருந்தானாம், ஆனா நம்ப அம்மாவோட காதுல வேற மாதிரி விழுந்து அவள் 14 லோகத்துலையும் கிடைக்கர்த்துக்கு அதிசயித்திலும் அதிசயமான சாயுஜ்யத்தை குடுத்துட்டாளாம். இதை செளந்தர்யலஹரியிலெ ஒரு ஸ்லோகத்துல அழகா சொல்லி இருப்பார் அந்த காலடி மைந்தன். “பவானி த்வம் தாஸே!” என்று அந்த ஸ்லோகம் ஆரம்பிக்கும்.

“பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டி; ஸ கருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வம் இதிய

ததைவ த்வம் திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புடமகுட நீராஜித பதாம்”

‘பவன்’ அப்பிடின்னா தலைவன்னு அர்த்தம், பவனோட ‘ஆத்துக்காரி’ பவானி. “ஹே பவானி! இந்த தாசனை கொஞ்சம் பாக்கக்கூடாதோடியம்மா! என்று நாம கேட்டா அது தயாளமான மனசுடைய அவளோட காதுல “பவானித்வம் தாஸே” என்று விழுந்து “இந்தா கோழந்தை!”னு சர்வசாதாரணமா சர்வலோக சக்கரவர்த்தியா ஆக்கிடுவா. (பவானித்வம் அப்பிடின்னா தலைமைனு ஒரு அர்த்தம் வரும், அன்றியும் நான் நீ எனும் பேதம் அற்ற நீயே நானாகிறேன் எனும் நிலை எனும் ஒரு அர்த்தம் கூட வரும்). இதே அர்த்தம் வரும்படியான ஒரு அந்தாதிப் பாடல் நம் அபிராமிப்பட்டருடயது,

“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”

அம்பாளோட ஆராதனைல கேரள தேசத்திலையும், நம்ப தமிழ் நாட்டுலையும் இஞ்சிக்கு சிறப்பு இடம் உண்டு. பாசிப்பருப்போடு சேர்ந்து செய்த பொங்கலாகட்டும், பானகமாகட்டும், நீர்மோராகட்டும் எல்லாத்துலையும் இஞ்சியோட ருசி இருக்கும். இஞ்சி செழுமையாக நல்ல நீர்வளத்தோட இருக்கும் போதும் சரி, நாளாவட்டத்துல காய்ஞ்சு போய் சுருங்கி சுக்கா ஆகும் போது அதோட ருசயிலெ எந்த வித்தியாசமும் இருக்காது, அதே போல ஒரு உண்மையான சாதகன் லோகத்தையே பரிபாலனம் பண்ணும் ராஜாவா ஆனாலும் சரி, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடுத் தெருவில் நின்னாலும் சரி அம்பாளிடம் அவன் கொண்ட திடமான வாத்சல்யம் மாறாம இருக்கணும், அதுதான் உண்மையான சாக்தனுக்கு உரிய லக்ஷணம். அதை உணர்த்துவதற்க்கு தான் இஞ்சி அடிக்கடி சேர்க்கப்படுகிறது.

“ந ஜானாமி தானம் த சத்யான யோகம்

ந ஜானாமி தந்த்ரம் ந சஸ்தோத்ரமந்த்ரம்

ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ”

“அம்மாடி பவானி! நேக்கு தானம் பண்ணவும் தெரியாது, யோகம் பண்ணவும் தெரியாது, மந்த்ரம் ஸ்தோத்ரம்னு எதுவுமே தெரியாது. உருப்படியா ஒரு பூஜை கூட பண்ண தெரியாதுன்னா பாத்துக்கோயேன். நேக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும்தான். நீயே கதி!”

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in சாக்தம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Saktham, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.