Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மஹா சிவராத்திரி | Maha Sivarathri | பூங்காவனத்தம்மன்

இன்று ஸ்ரீ ஏகவள்ளி அம்மன் துணையால், அருள்மிகு ஸ்ரீதேவி புற்று பூங்காவனத்தம்மன் ஆலய 16-ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம். அதன் முகப்பை இங்கு இட்டுள்ளோம்.

பூங்காவனத்தம்மன்
புற்று பூங்காவனத்தம்மன் ஆலய மயான கொள்ளை திருவிழா அழைப்பிதழ்

நிகழும் கர ஆண்டு மாசி திங்கள் 8-ம் நாள் (20-02-2012) திங்கள், மஹா சிவராத்திரி அன்று ‘நீவா’ நதிக்கரையில் கொடி மரம் நடுதலும், அதனை தொடர்ந்து மாசி 9-ம் நாள் (21-02-2012) செவ்வாயன்று மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ தேவி புற்று பூங்காவனத்தம்மனுக்கு மயான சூறை நடைபெறும் என்றும், அது சமயம் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பூஜை தந்து சிறப்பிக்குமாறு, திருவலம், மேட்டுப்பாளையம் சேக்கிழார் நகர ஊர் பொதுமக்கள் பேரன்புடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்விழாவின் நிகழ்ச்சிகளாவன:

கர வருடம் தை 24-ம் நாள் (07.02.2012) செவ்வாயன்று, தை பௌர்ணமியில் இரவு 10.00 மணியளவில் அம்மனுக்கு காப்பு கட்டுதலும்,

கர வருடம் மாசி 08-ம் நாள் (20.02.2012) திங்களன்று, மஹா சிவராத்திரியில் இரவு 7.00 மணியளவில் அம்மனுக்கு ‘நீவா’ நதிக்கரையில் கொடி மரம் நடுதலும், மறு நாள் (அ) மாசி 09-ம் நாள் (21.02.2012) காலை 7.00 மணியளவில் தாய் வீட்டு சீறுடன் அபிஷேகமும், 8.00 மணியளவில் பூ எடையும், 11.00 மணியளவில் பொலிசெட்டி, பொலிமுரம் எடுத்தலும், பிற்பகல் 02.00 மணியளவில் அந்தரங்க மாலை அணிவிப்பதும், மாலை 05.00 மணியளவில் ‘நீவா’ நதிக்கரையில் புஷ்பாலங்கார ரூபத்துடன் மயான சூறையும், இரவு 08.00 மணியளவில் “தீமிதி திருவிழா” வும், இரவு 10.00 மணியளவில் நாடக நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாகவும், மறு நாள் (அ) மாசி 10-ம் நாள் (22.02.2012) காலை 11.00 மணியளவில் ஸ்ரீ தேவி புற்று பூங்காவனத்தம்மன் புஷ்பாலங்கார திருவீதி உலாவும் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுர வாசத்தால் புனிதமிழந்த சமுத்திர நீரெல்லாம் ‘கும்பமுனி’யாம் அகத்தியரால் ஆபோஷணம் செய்யப்பட, பகீரதனுடய தவத்தால், ப்ரளையமாக வந்த ஆகாய கங்கையெனும் புனித நீரால் பரசிவனார் நிரப்பிய சாகரத்தில், எங்கு எங்கோ ஜனித்த நதிகள் சங்கமித்து, சூர்யாக்னியால் புடமிடப்பட்டு, நீராகி புனிதமடைந்து, பரசிவனார் ஜடாமுடியை அடைகின்றனவோ அதுபோல் யார் எவ்வாறு நிறைமனதோடு பூஜனை செய்தாலும் அது “இறைவழிபாடே” என்பதின் காண், இதுவும் இடம் பெருகிறது.

 சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.