Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ரதஸப்தமி ஸ்நாந ஸ்லோக: | Ratha Sapthamee Snana Sloka:

ரத ஸப்தமி ஸ்நாந மந்த்ர:

ரத ஸப்தமி ஸ்நாந மந்த்ர:

ரதம் என்றால் தேர், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு அருணன் என்னும் ஸாரதியால் (தேரோட்டியால்) செலுத்தப்படும் ரதத்தில் இடைவிடாமல் ஸஞ்சரிக்கும் சூரியன், தனது ரதத்தை (தேரை) தெற்கு திசையிலிருந்து விலகி வடக்கு திசையை நோக்கி திருப்புவதால் இன்று ரத ஸப்தமீ என்று பெயர்.

கஸ்யப மஹரிஷிக்கும் தேவர்களின் தாயாரான அதிதிக்கும் புத்ரராக ஸூரியன் அவதரித்த (பிறந்த) நாள்தான் ரதஸப்தமீ,

இன்று அதிகாலையில் ஸ்னானம் செய்யும் ஸமயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஏழு எருக்கு இலைகளுடன் மங்கள அக்ஷதை (அரிசி), அருகம்புல், கோமயம் (பசுஞ்சாணி), மஞ்சள் பொடி, ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தலையில் வைத்துக் கொண்டு, ஸூர்யனை (கிழக்கு திசையை) நோக்கியவாறு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி ஸ்னானம் செய்வதால், ஸூரியன் நமக்கு அருள்புரிவார் என்றும், அதனால் நாம் முன் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

நாமும் இன்று இவ்விதம் முறையாக அர்க்கபத்ர (எருக்கு இலை) ஸ்னானம் செய்து கண் கண்ட கடவுளான ஸ்ரீ ஸூரிய பகவானின் அருளை அடைவோமாக!

ரதஸ்ப்தமி ஸ்நான ஸங்கல்பம்

ஸ்ரீ ……..நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே, ஹேமந்தருதௌ, மகர மாஸே, சுக்லபக்ஷே, ஸப்தம்யாம் புண்யதிதௌ, …………வாஸர யுக்தாயாம், ……….. நக்ஷத்ரயுக்தாயாம் |  ரதஸப்தமி புண்யகாலே, ஸ்நாநமஹம் கரிஷ்யே ||

ஸ்னானம் செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

எருக்க இலை, அக்ஷதை, அருகம்புல் இவைகளை தலையில் வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்யவும்.

ஸப்த சப்திப்ரியே தேவி ஸப்தலோக ப்ரதீபிகே |

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம் ||

ஏதஜ்ஜன்ம க்ருதம் பாபம் க்ருதம் ஸப்த்ஸு ஜன்மஸு |

ஸர்வம் சோகஞ்ச மோஹஞ்ச மாகரீஹந்து ஸப்தமீ ||

நெளமி ஸப்தமி தேவித்வாம் ஸப்தலோகைக மாதரம் |

ஸப்தார்க்க பத்ர ஸ்நாநேந மமபாபம் வ்யபோஹய ||

(1) ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன் கூடிய ஸூர்யனின் ப்ரியமான தேவியே! ஏழு உலகங்காளாலும் பூஜிக்கப்படுபவளே! ஹே ஸப்தமிதேவி! ஏழு ஜன்மங்களில் நான் ஸேகரித்துள்ள பாபங்களை விரைவாக அபஹரித்துக்கொள்.

(2) மகர (தை) மாத ஸப்தமியே!, என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட (1, முன்பிறவி, 2, இந்த பிறவி, 3, மனது, 4, உடல், 5, வாக்கு, 6, அறிந்து செய்தது, 7, அறியாமல்செய்தது என) ஏழுவிதமான பாபங்களால் ஏற்படப்போகும் நோயிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் என்னை விடுவிப்பாயாக.

(3) ஹே ஸப்தமி தேவியே! ஏழுலகங்களுக்கும் தாயாரான உன்னை வணங்குகிறேன். ஏழு எருக்க இலைகளால் நான் செய்யும் ஸ்னானத்தால் எனது பாபத்தை போக்கி அருள் புரிவாயாக.

இவ்வாறு ச்லோகம் சொல்லி ஸ்னானம் செய்து விட்டு வஸ்த்ரம் உடுத்திகொண்டு

“ரதஸப்தமீ ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே” என்று ஸங்கல்பம் கூறிகொண்டு

ஸப்த ஸப்தி ரதஸ்தான ஸப்தலோக ப்ரதீபக |

ஸப்தம்யா சஹிதோ தேவ க்ருஹாணார்க்யம் திவாகர ||

திவாகராய நம: இதம்ர்க்யம் இதம்ர்க்யம் இதம்ர்க்யம்

ஏழு குதிரை பூட்டிய தேரில் அமர்ந்திருப்பவரே! ஏழு உலகங்களுக்கும் ஒளியளிப்பவரே! ஹே திவாகர! நக்ஷத்ர மண்டலங்களுக்குத் தலைவரே! ரதஸப்தமியன்று என்னால் தரப்படும் இந்த அர்க்ய (ஜல)த்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

என்னும் மந்த்ரம் சொல்லி சுத்தமான தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு மூன்று முறை அர்க்யம் தர வேண்டும்.

மேலும் இன்று வைவஸ்வத மன்வாதி புண்யகாலமாகையால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் இன்று வைவஸ்வத மன்வாதி புண்யகாலே என்று கூறி முன்னோர்களுக்கு தர்ப்பணமும் செய்யவேண்டும்.

இன்று செய்யப்படும் தானங்கள் அளவற்ற பலனைத்தரும். ஆகவே சக்திக்குத் தக்கவாறு ஏழைகளுக்கு தானங்களையும் செய்யலாம்.

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.