மலைச்சுற்று | HAINDAVA THIRUVALAM | ஹைந்தவ திருவலம்

முருகனின் மணக்கோலம்

முருகனின் மணக்கோலம்

திருவலம் உறை வல்லாம்பிகை, தனுர்மத்யாம்பாள் சமேத வேதநாயகன் அருட் திரு வில்வநாதீஸ்வரர், தனது “மலைச்சுற்று” இரண்டாம் நாள் தன்னில், கயிலாசக் குன்றில் அருட் திரு சுப்ரமண்ய ஸ்வாமி, ஸ்ரீ க்ஷேத்திரத்திற்கு எழுந்தருளினார். இங்கு, வில்வநாதருக்கும், அம்பாளுக்கும், கூடவே வேல்-அவனாம், வேல்-ஆயுதனின், திருக்கல்யாண வைபவம் செவ்வனே நடைபெற்று, இரு சிவமூர்த்திகளும், அவர்தம் அடியார்க்கு பேரருள்பாலித்தனர்.

அருட்திரு வல்லாம்பாள் ஸ்ரீ தனுர்மத்யாம்பாளுடன், வல்லநாதர் ஸ்ரீ வில்வநாதர் திருக்கல்யாணமும், தினைப்புல சுந்தரியாம் வள்ளியுடனும், இந்திரதனையை சுந்தரியாம் தெய்வயானையுடனும் மணக்கோலம் பூண்ட ஷண்முகனின் திருக்கல்யாணமும், திருவலம் சிவாச்சாரியார், கந்தஸ்வாமி குருக்கள் மற்றும், பொன்னை சிவாச்சாரியார், சுந்தரமூர்த்தி குருக்களால், உத்ஸவமூர்த்திகளின் அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சிறப்புடன் வெகு விமரிசையாக நடந்தேரியது. 

பி.கு:

அன்னை அபிராமியைப் பற்றியும், பட்டரைப் பற்றியும் பதிவிட வலைத்தேடல் செய்தபோது இரு முத்துக்கள் கிட்டின, அவற்றை அப்படியே இங்கு நாளை பகிர்ந்துகொள்கிறேன். பெருமையெலாம் ஆக்கியவரையே சாரும்.

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.