குண்டலினியும், கம்சனும், கிருஷ்ணன் அவதாரமும்!

மதுராவை கொடுங்கோலன் கம்சன் ஆண்டு வந்தான். தன் தந்தையையே சிறையிலடைத்து ராஜ்யத்தை கைப்பற்றியவன் அவன். தன் தங்கை தேவகியை வசுதேவருக்கு மணம் செய்வித்தபோது ஒரு அசரீரி ஒலித்தது, “கம்சா, உன் தங்கைக்கு பிறக்கும் 8வது குழந்தை உன்னை கொல்வான்” என்று, அதைக்கேட்டு கோபம் கொண்ட கம்சன் தேவகியை வெட்டுவதற்கு வாளை ஓங்கினான். அப்பொழுது வசுதேவர் அவன் காலை பிடித்து மன்றாடினார். அவளை விட்டுவிடு பிறக்கும் குழந்தைகளை பிறந்த க்ஷணமே உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்றார். சினம் தணிந்த கம்சன் அவர்களை சிறையில் அடைத்தான். பிறகு ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதை தரையில் மோதி கொன்றான். எட்டாவது குழந்தையை தரையில் மோத கையை ஓங்கிய போது அந்த குழந்தை கையிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு மேலே பறந்து சென்று, “கம்சா, உன்னை கொல்லப்போகிறவன் வேறு இடத்தில் பிறந்துள்ளான்” என்று கூறிவிட்டு மறைந்து விட்டது.

கிருஷ்ணர்

கிருஷ்ணர்

வருமுன் காப்போம் (Prevention is better than cure) என்பது கம்சனுக்கு அல்லது அவன் சபையில் இருந்த அறிஞர்களுக்கு தெரியவில்லையா? தம்பதிகளை தனித்தனியே அடைத்து இருக்கலாமே? கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி கொக்கின் கண்ணை மறைக்கும்போது பிடிக்கணும் என்பது போல் உள்ளது குழந்தை பிறக்கவிட்டு கொல்வது. கம்சன் அவ்வளவு புத்தி இல்லாதவனாகவோ அல்லது அவன் சபையில் அறிஞர்களே இல்லாமலோ இருக்க முடியாது. ஆகையால் இந்த கதையில் ஏதோ உள் அர்த்தம் மறைந்துள்ளது என்று தெரிகிறது. அது என்ன? சிறிது ஆராய்வோமா!

இங்கு மானுட-அசுரனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா, சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இங்கு மானுட-மனிதராக வசுதேவரும், தேவகியும், சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.

இங்கு மானுட-தேவனாக ஸ்ரீ கிருஷ்ணர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கு முன் நம்முடைய உடலை பற்றி கவனிப்போம். நாடியும் சக்கரமும் குழல், சப்தம், அதிர்வு, (resonance) இவற்றை “நாட்” என்பர். இதிலிருந்து வந்தது “நாடி” என்னும் சொல். நாடி என்பது, காற்று, தண்ணீர், இரத்தம், சத்துப்பொருள். இவற்றை உடல் முழுமையும் எடுத்து செல்லும் குழாய்கள். அதாவது அவைதான் நம்முடைய, arteries, veins, capillaries, bronchioles இவைகளாவன. நம்முடைய, அளக்க அல்லது எடை பார்க்க முடியாத, சூக்ஷம (subtle), ஸ்தூல (spiritual) சரீரத்தில், இவை பிரபஞ்ச சம்பந்தமான, முக்கிய, வளர்ச்சிக்கான சக்திகளுக்கு (cosmic, vital and seminal energies) கால்வாய்களாக பயன்படுகின்றன. மேலும் தொடு உணர்ச்சி, உணர்வு, ஆன்மீக ஒளி (sensation, conciousness, and spiritual aura) இவற்றிற்கும் உபயோகமாகின்றன. அவைகளுடைய செய்கைக்கு தக்கவாறு பெயரிடப்பட்டுள்ளன.

நாடிகாஸ் எனப்படுபவை சிறிய நாடிகள். நாடிசக்ரா எனப்படுபவை, மூன்று சரீரங்களிலும் — gross, subtle and casual-ganglia or plexuses ஆகும். எல்லா நாடிகளும் கண்டஸ்தானம் என்னும் இரண்டு மத்யபாகத்தில் (Centres) எதாவது ஒன்றிலிருந்து உற்பத்தியாகும் (originate). இந்த கண்டஸ்தானம் தொப்புளுக்கு சிறிது கீழேயும், இருதயத்திலும் உள்ளது. மலத்துவாரத்திற்கும் பிறப்புறுப்பிற்கும் 12 டிஜிட்ஸ் (digits) மேலே தொப்புளுக்கு சிறிது கீழேயும் முட்டை வடிவத்தில் ஒரு பல்ப் (bulb) உள்ளது. இது “கண்ட” என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து நாடிகள் புறப்பட்டு உடல் பூராகவும் எல்லா திசைகளிலும் பரவி இருக்கிறது. .”சிவ ஸம்ஹிதை” 3,50,000 நாடிகளை குறிப்பிடுகிறது. இதில் பதினான்கு நாடிகள் மிக முக்கியமானவை. மிக மிக முக்கியமான (vital) மூன்று நாடிகளாவன சுசும்நா, இட, பிங்களா என்பன.

குண்டலினி:

குண்டலினி ஒரு தெய்வீக சக்தி (cosmic energy). இந்த வார்த்தை வளையம் அல்லது சுழல் (coil) என்று பொருள் கொண்ட “குண்டல” என்ற வார்த்தையிலிருந்து உண்டானது (derived). இந்த மறைந்துள்ள சக்தி (latent energy) மூன்றறை சுருளாக தன் வாலை கீழ்நோக்கி இருக்கும் வாயில் கவ்விக்கொண்டு தூங்கும் சர்பமாக அனுமானிக்கப்படுகிறது (symbolized). இது சுசும்னாவின் காலியான அடிப்பாகத்தில் (hollow base), இரண்டு டிஜிட்ஸ் பிறப்புறுப்பிற்கு (genitals) கீழும் இரண்டு டிஜிட்ஸ் மலத்துவாரத்திற்கு மேலும், இருக்கிறது. மூன்று சுழல்கள் (coils) நம்முடைய மனத்தின் மூன்று நிலைகள் (stages) அதாவது அவஸ்தைகளை குறிக்கிறது. அதாவது “விழிப்பு” (awake, jagrat), “ஸ்வப்னம்” (Dreaming), “ஆழ்ந்த தூக்கம்” (Susupti). நான்காவது நிலை “துரியா” மற்ற நிலைகளை சேர்த்தும், தாண்டியும் (combining and transcending the others) கடைசி அரைச் சுழலை குறிக்கிறது. இந்த நிலை சமாதி நிலையில் அடையப்படுகிறது.

இட, பிங்களா, சுசும்னா, இவைகள் மூலமாக செல்லும் சக்தி (energy), “பிந்து” என அழைக்கப்படுகிறது, சரியாக (literally) ஒரு பகுதியும், அளவும் (Magnitude) இல்லாத ஒரு புள்ளி. இந்த மூன்று நாடிகளும் முறையே சந்திர, சூரிய, அக்னி நாடிகளை குறிக்கின்றன. “குண்டலினி” என்னும் வார்த்தை உபயோகத்திற்கு வருமுன், சுத்தி செய்துகொண்டு நெருப்பு போல் மேல் எழும்பிய தெய்வீக சக்தியை குறிக்க “அக்னி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டது. யோக பயிற்சியின் மூலம், சுற்றி படுத்திருந்த சர்ப சக்தியின் தலை மேல் நோக்கி எழச் செய்யப்படுகிறது. இந்த சக்தி இருதயத்திலிருந்து கிளம்பும் “சித்ர” வழியாக சுசும்னாவை ஊடுருவி நீராவி போல, சகஸ்ராராவை அடையும் வரை செல்கிறது. குண்டலியின் இந்த சக்தி விழிப்படையச் செய்யும்பொழுது, இடாவும் பிங்களாவும் சுசும்னாவுடன் இணைந்துவிடுகிறது. (சிவ ஸம்ஹிதா V.13). குண்டலினி சகஸ்ராரவை அடையும்பொழுது, சாதகன் தன்னுடைய தனிப்பட்ட உருவகத்தை (separate identity) உணர்வதில்லை. எதுவும் அவனுக்கு தோன்றுவதில்லை (nothing exists for him). வெற்றுவெளியில் நேரத்தின் தடைகளை கடந்துவிடுகிறான் (crosses the barrier of time in space). பிரபஞ்சத்தில் ஒருவனாகிவிடுகிறான்.

சக்ராக்கள்: சக்ரம் என்பது ஒரு வளையத்தை குறிக்கிறது. சக்ராக்கள், பரவும் சக்தி (Radiating energy), நாடிகளை பல கோசங்களுக்கு இணைக்கும், முதுகெலும்பின் முக்கிய புள்ளிகளிள் (vital centers), சக்ரங்கள், காஸ்மிக் அதிர்வகளை, ஈற்று, உடல் பூராகவும் உள்ள நாடிகள், தமனிகள், சிராக்கள் இவைகளில் பரப்புகிறது. இந்த உடல் பிரபஞ்சத்தில் ஒரு அம்சம் (counterpart of the Universe), முழுமையான, ஸ்தூல, ஆன்மீக நிலைகளுள் (on the gross, subtle and spiritual levels). மைக்ரோ காஸ்மத்தினுள் மைக்ரோகாஸம், ஆகும்..

இரண்டு வித முக்கிய சக்தி, உடலில் பரவியுள்ளது. அதாவது ஸூரியனிடமிருந்து வரும் சக்தியை பிங்களா நாடி வழியாகவும், சந்திரனிலிருந்து வரும் சக்தியை இட நாடி வழியாகவும் உடலில் பரவச்செய்கிறது. இந்த இரண்டு சக்திகளும் (currents), சக்ரங்களில் ஒன்றுக்கொன்று முக்ய புள்ளிகளான சுசும்னாவில் (முதுகுதண்டில் உள்ள அக்னி நாடியில்) குறுக்கிடுகின்றன.

முக்ய சக்ரங்களானவை;

1.மூலாதாரம் (vital part), situated in the Pelvis above anus)
2. ஸ்வாதிஷ்டானம் (seat of a vital force) situated above the organs of generation
3. மணிபூரகம் (situated in the navel)
4. ஸூர்யா
5. மனசு (mind situated between navel and heart)
6.அனாஹதா (heart in the cardiac area)
7. விசுத்தி pure) in the pharyngeal region;
8. ஆக்ஞா (Ajna), (command) between the eyebrows
9. சோமா the moon in the center of the brain
10. லலாட at the top of the forehead;
11. சஹஸ்ராரா. which is called the thousand- petalled Lotus in the brain.

இவைகளில் மிக முக்யமானவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதா, விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரா இவைகளாவன.

1. மூலாதாரமானது, தூண்டப்படும்பொழுது சாதகன், சக்தியில் உறுதியாகவும், தன்னுடைய வீரியத்தை (urduvaretas) உயர்வு படுத்தவும் (நிறைவெய்திய நிலைஅடையவும்) தயராகிறான் {ready to sublimate his sexual energy}.

2. ஸ்வாதிஷ்டானா தூண்டப்படும் பொழுது, சாதகன், எல்லா வியாதிகளிலிருந்து விடுபட்டு மிகவும் ஆரோக்யமான தேகத்தை பெறுகிறான். சோர்வு அடைவது இல்லை. எல்லோரிடமும் நட்பாகவும், சுமுகமாகவும் இருப்பான்.

3. மணிபூரகம் தூண்டப்படும்பொழுது சாதகன், கேடு விளைவிக்கும் சந்தர்பங்களிலும், அமைதியுடன் இருக்க முடியும்.

4. அனாஹத சக்ரம் உடலையும், ஆன்மீகத்தையும் சார்ந்த இருதயம் (of the physical and the spiritual heart) உள்ள பிரதேசத்தில் இருக்கிறது. இது காற்றும், தொடு உணர்ச்சியும் ஆனது (element of air (vayu) and of touch).

5. விசுத்தி தூண்டப்படும்பொழுது, சாதகனுக்கு, புரிந்துகொள்ளும் சக்தி அதிகரிக்கிறது. அவன் புத்திசாலித்தனமாக உஷாரகிறான். (intellectually alert). அவனுடைய பேச்சு சரளமாகவும், புரியும்படியாகவும், (distinct) அமையும்.

6. ஆக்ஞா (Ajna), தூண்டப்படும்பொழுது, சாதகன், தன்னுடைய சரீரத்தை கட்டுப்படுத்தும் திறமையை அடைகிறான் (gains control over the body), மேலும் ஒரு ஆன்மீக ஒளியை வளர்த்துக்கொள்கிறான் (develops a spiritual aura)

7. சஹஸ்ரார சக்ர அல்லது சஹஸ்ர தளா, ப்ரம்ம நாடியின் (அல்லது சுசும்னா) முடிவில் ,பரப்ரஹ்ம்மத்தின் இருப்பிடம். குண்டலினி சக்தியானது சஹஸ்ராவை அடையும்பொழுது, சாதகன் எல்லா தடைகளையும் (barriers) கடந்து ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட ஆத்மாவாகிறான், (சித்தராகிறான்) (becomes an emancipated soul). இந்த நிலையை, ‘ஸத்சக்ரநிருபணா’ 40வது ஸ்லோகம், ஸூன்ய நிலைக்கு ஒப்பிடுகிறது (நாடியும் சக்ரமும் பற்றிய விவரங்கள் (Light of Pranaayama by B.K.S. Iyengar) புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

குண்டலினி யோக சக்ரம்

குண்டலினி யோக சக்ரம்

 நாம் இப்பொழுது மேற்கண்ட விளக்கத்தை கம்சன்-கிருஷ்ணர் கதையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். கதையில் காலபரிமாணம் குறிப்படப்படவில்லை. எட்டாவது குழந்தை கம்சனை கொல்லும் என்றுதான் சொல்லப்படுகிறது. எப்பொழுது கொல்லப்படுவான் என்பது தெரியாது. அதாவது எப்பொழுது சாதகன் கடைசி நிலயை (சித்தி) அடைவான் என்பதை திட்ட வட்டமாக சொல்ல முடியாது. தேகத்தின் அடிப்பாகத்தில் தூங்கும் சர்ப்பத்தை சிறையில் அடைபட்டிருக்கும் தம்பதிகளுக்கு ஒப்பிடலாம். இடா, பிங்களா நாடிகள் வசுதேவரையும் தேவகியையும் குறிக்கின்றன. இடா, பிங்களா நாடிகள் ஒரு சக்ரத்தை கடக்கும்பொழுது (அதாவது குண்டலினி, சக்ரம் இருக்கும் இடத்திற்கு எழும்பும்பொழுது), சாதகன் அந்த சக்ரம் குறிக்கும் வினைகளிலிருந்து விடுபடுகிறான் (சக்ரம் தூண்டப்படும்போது ஏற்படும் மேலே கூறியுள்ள விளக்கத்தை கவனிக்கவும்). இதேமாதிரி ஏழு இடங்களிலும் அந்தந்த சக்ரம் குறிக்கும் வினைகளிலிருந்து விடுபடுகிறான். ஒவ்வொரு குழைந்தையும் அந்த சக்ரத்தின் வினைக்கு ஒப்பிடப்பட்டு நசிக்கப்படுகிறது.

படிப்படியாக, குண்டலினி சஹஸ்ராராவை அடைந்து சாதகன் சித்தனாகிறான் ஆகையால் எட்டாவது குழந்தை கிருஷ்ணர் தங்குகிறான்.

–ஹைந்தவ திருவலம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.