Pongal Greetings | பொங்கல் நல்வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் பதிவு உலக கவிதாயினி திருமதி கவிநயா அவர்களின் கவிதையை இந்த வருட பொங்கலன்று பதிவிட்டு, தமிழ் மக்கள் எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

பொங்கலோ பொங்கல்!!

பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!

அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!

பொங்கலோ பொங்கல்!!

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!

மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!

பொங்கலோ பொங்கல்!!

மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!

கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!

பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!

இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!

பொங்கலோ பொங்கல்!!

பொங்கலுக்கு ஒரு ஸ்வீட்

தேவையான பொருட்கள்:

 பச்சை அரிசி                             ¾ கப்

பால்                                               1 லிட்டர் (அ) 5 கப்

வெல்லம்                                    1¼ கப்

பயித்தம்-பருப்பு                       ¼ கப்

நெய்                                               2 டீ ஸ்பூன்

முந்திரி                                         10

திராட்சை                                     10

ஏலக்காய் பொடி                      1 டீ ஸ்பூன்

 செய்முறை:

 அடி கனமுள்ள பாத்திரத்தில் பயித்தம்பருப்பை பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும்.  அரிசியை நன்கு கழுவி, வறுத்த பயித்தம் பயிரையும், 4 கப் பாலையும் சேர்த்து குக்கரில் 7 (அ) 8 விசில் வரும் வரை அன்னம் குழைய வேகவைக்கவும்.

 மீதமுள்ள பாலில், வெல்லத்தை இட்டு, பாலை வெல்லத்தின் பச்சை மணம் மாறும் வரை சுடவைக்கவும்.  பிறகு, இதை வெந்த அன்னத்துடன் நன்றாக கலக்கவும்.

 நெய் விட்டு, முந்தரி, திராட்சையை பொன்னிரமாக வருத்து அன்னத்துடன் கலக்கவும், முடிவில், ஏலக்காய் பொடி தூவி நன்றாக கிளரவும்.

 சுடச்சுட சுவையான பொங்கல் நைவேத்யம் தயார். செய்து பாருங்களேன்!

–ஹைந்தவ திருவலம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.