திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில், சிவானந்த மௌனகுருவின் குருபூஜை விழா

திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில், சிவானந்த மௌனகுருவின் 24-ம் குருபூஜை விழா, நேற்று சிறப்புடன் நடந்தேறியது.

சிவானந்த மௌனகுரு சமீபகாலத்தில், தமது வாழ்நாழில் வரலாற்று சிறப்புமிக்க திருவலம் வில்வநாதீஸ்வரர் திருக்கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்தும், திருத்தணி முருகன், சென்னை கந்தசாமி முதலிய பல கோவில்களுக்கும் வெள்ளியிலும், மரத்திலும் ஆன திருத்தேர் உபயம் அளித்தும், கல்வி நிறுவனங்களுக்கும், இயற்கையின் சீற்றத்தால் பதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியும் சேவை செய்துள்ளார்.

சித்தர் போல் வாழ்ந்த இவர், திருவலம் கோவிலில் 1988-ம் ஆண்டு ஜனவரி 1-ம் நாள் சமாதியில் அமர்ந்தார்.  அதுமுதல், ஜனவரி 1-ம் தேதி அன்னாரது குருபூஜை இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு 24-ம் குருபூஜையை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல் நிகழ்ச்சிகள் ஆரம்பித்து, நேற்று, மதியம் முதல் அன்னதானமும், மாலையில் சுவாமிகள் திருவீதி உலாவும், கலை நிகழ்ச்சிகளும், சிவானந்த மௌனகுரு அறக்கட்டளையால் சிறப்புடன் நிறைவேற்றப்பட்டது.  இவ்விழாவில் ஏராளமானோர் பங்கெடுத்து, கண்டு களித்து இன்புற்றனர்.

-செல்வபிள்ளை

This entry was posted in Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.