சிவ ஆகமம் – மணி அடித்தல்

12.1 அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தில் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு – இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும்,

12.2 கர்ஷணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்; தூப – தீபம் காட்டும்போதும், பலி காலத்திலும் இடைவிடாமல்  கைமணி ஒலிக்க வேண்டும்.

12.3 மணி நாத கிரமம் :

1 அடி; மோக்ஷம்

2-அடி: போகம்,

3-அடி : சகல ஸித்தி,

புண்யாஹவாசனம், தூப-தீபம் நைவேத்யம், பலி ஆகிய காலங்களில் 2-அடி அடிக்கலாம்;

தீபாரதனையின்போது (விரைவாக) 1-அடி அடிக்க வேண்டும்;

மற்ற தேவைக்கு 3-அடி அடித்து பெரிய மணி நாதம் எழுப்ப வேண்டும்.

 

This entry was posted in Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.