கோயிலுக்கு செல்லும் போது அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்ன?

எந்தக் கோயிலுக்கு செல்கிறோம் என்பதைப் பொறுத்து இதற்கான பதில் மாறுபடும். உதாரணமாக விநாயகர் கோயிலுக்கு சென்றால் அருகம்புல் கொண்டு செல்ல வேண்டும். சிவன் கோயிலுக்கு என்றால் வில்வ இலை. பெருமாள் கோயில் என்றால் துளசி மாலை. ஆஞ்சநேயர் கோயில் என்றால் வெண்ணெய்.

துர்க்கை, காளியை வழிபடச் சென்றால் அரளிப்பூ கொண்டு செல்லலாம். மல்லிகைப்பூ அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்றது. கோயிலுக்கு செல்பவர்கள் பொதுவாகக் கொண்டு செல்ல வேண்டியது எண்ணெய், அகல், திரி, தீப்பெட்டி, கற்பூரம்.

இதில் தீப்பெட்டி கொண்டு செல்லாவிட்டால், பிற தீபங்களில் இருந்து ஏற்றிக் கொள்ளலாம் என நினைப்பது தவறு. கோயிலில் ஒருவர் ஏற்றிய தீபத்தில் உள்ள சுடரைப் பயன்படுத்தி மற்றொரு தீபத்தை ஏற்றக் கூடாது. தீக்குச்சியை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

ஒருவேளை தீப்பெட்டியை மறந்து விட்டால், கோயிலில் உள்ள சர விளக்குகளில் உள்ள சுடரைப் பயன்படுத்தி தீபத்தை ஏற்றலாம்.

This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.