கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளை தொட்டு வணங்கலாமா?

தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்களில் மூலவர் அறைக்குள் அர்ச்சகர் மட்டுமே நுழைய முடியும். மக்கள் அங்கு செல்ல முடியாது. ஆனால் பிரகாரத்தில் உள்ள பிற தெய்வங்களின் சிலைகளை தொட்டு வணங்குவது வழக்கமாக உள்ளது. இதுபோல் தெய்வச் சிலைகளை தொட்டு வணங்குவது சரியா?

கோயில் என்பதை மரியாதைக்குரிய இடமாக கருதுகிறோம். பொதுவாக மரியாதைக்கு உரிய மனிதர்களையே நாம் தொட்டுப் பேசுவது கிடையாது. ஒரு சில அடி தூரம் தள்ளி நின்று பவ்யமாகவே பேசுவோம்.

மரியாதைக்குரிய மனிதர்களுக்கு இவ்வளவு மதிப்பளிக்கும் நாம், இறைவனைத் தொட்டு வணங்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே, தெய்வச் சிலைகளை தொடாமல் வணங்குவதே சிறந்தது.

இதற்காக சிலைகளைத் தொட்டால் பாவம், தீட்டு என்பது போல் காரணம் கற்பித்துக் கொள்ளக் கூடாது. மரியாதை நிமித்தமாகவே சிலைகளை தொடாமல் வணங்க வேண்டும் என்று கூறுகிறேன். இறைவன் மேன்மை பொருந்தியவர் என்பதாலும், அவரைத் தொடும் தகுதி நமக்கு இல்லை என்பதாலும், தொடாமல் தள்ளி நின்று வணங்குவது நல்லது.

This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.