Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | கா‌ஞ்‌சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் ‌சிற‌ப்பு!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“கா‌ஞ்‌சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் ‌சிற‌ப்பு!”

|| காஞ்சி காமாட்சி அம்மனை எந்த மாதிரியான சிக்கல்கள் தீர வழிபடலாம் ||

காமாட்சி அம்மன் பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.

எவ்வளவோ பேர்களை, பிரிந்திருந்தவர்களை காஞ்சி காமாட்சி அம்மனிடம் போய்விட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன். விவாகரத்து ஆன கணவன், மனைவியைக் கூட காமாட்சி அம்மன் கோயிலிற்குப் போய் வாருங்கள் என்று சொன்னேன். விவாகரத்து வாங்கிவிட்ட பிறகு எப்படி ஒன்றாகப் போவது என்று கேட்டார்கள். ஆண்டவனுக்கு ஒரு வேண்டுதல் என்று சொல்லிவிட்டுப் போய் வணங்கிவிட்டு வாருங்கள் சில சாதகமான நிகழ்வுகள் நடக்கும் என்று சொன்னேன்.

வணங்கிவிட்டு வெளியே வந்த பிறகு, நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்று கணவன் கேட்க, நானும் அதைத்தான் நினைத்தேன் என்று மனைவி சொல்ல, அம்பாள் ஏதோ சொன்ன மாதிரி இருந்தது. நமக்குள் தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதே என்று மனைவி சொல்ல, இல்லை அதையெல்லாம் நான் மறந்துவிட்டேன் கணவன் சொல்லியிருக்கிறேன். இதுபோன்றெல்லாம் பார்க்கிறோம். குடும்பம் அமைதியாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அந்த குடும்ப அமைதிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் மாதிரி ஒரு சாத்வீகத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு அம்மனே கிடையாது.

அதற்கடுத்து தனதான்ய சமர்த்து. ஏனென்றால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டம் செய்திருக்கிறார்கள். ஆதிசங்கரர்தான் செய்து வைத்தார். ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம். அதனால் மிகவும் விசேஷமானது. வாராக் கடன்கள் வர ஆரம்பிக்கும். இந்த அம்மனுடைய கண்களில் தீட்சாயனம், தீர்க்கம் பார்க்கலாம். அவர் உட்கார்ந்திருக்கும் வடிவமே பத்மாசன வடிவம். ஆசனங்களிலேயே முக்கியமான ஆசனம் பத்மாசனம். அந்த பத்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதால்தான் கேட்டது கிடைக்கும். எது நியாயமானதோ அதை உடனே கொடுக்கக் கூடிய அம்பாள்.

அதற்கடுத்தது, அம்பாளுக்கு வலப்பக்கமாக இன்னொரு அம்பாள் தவக் கோலத்தில் இருக்கிறார்கள். நின்ற நிலையில், ஒன்றைக்காலில் ஒரு அம்மா தவம் செய்கிறார்கள். அதனால்தான் அந்த அம்பாளுக்கு எல்லா சக்தியும் உண்டு என்று சொன்னது. மற்றொரு பக்கம் இடப்பக்கத்தில் பார்த்தீர்களென்றால் அரூபமாக லட்சுமியும் இருக்கிறார்கள். பக்கத்தில் அன்னபூரணி, அதற்கும் மேலே சரஸ்வதி இருக்கிறார். இதுபோல பல சக்தி பீடங்கள் காமாட்சி அம்மனை சுற்றி இருக்கிறது.

சிவாலயங்களில் பார்த்தீர்களானால், தில்லை நடராஜர் கோயிலிற்குப் போனால் எல்லா சிவாலயங்களுக்கும் போன நன்மை உங்களுக்கு கிடைக்கும். அதேபோல, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிற்குக் போனால் அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் உங்களுக்குக் கிடைக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த ஒரு அம்மன்.

காமாட்சி அம்மனுக்கு விருத்தம் இருக்கிறது. அதில் உருகி உருகி பாடியிருக்கிறார்கள். அந்த விருத்தத்தில் ஒரு பாடலையாவது பாடி வழிபட்டால் அது இன்னமும் விசேஷமாக இருக்கும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தாலும் விசேஷம். சகல நலன்களும் உண்டாகும்.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.