Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!”

தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தி மரத்தில் செய்யப்பட்ட விஷ்ணு சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் 12 வருடத்திற்கு ஒருமுறை இழுப்பது என்பது உள்ளது. அப்படிப்பட்ட அத்தி மரத்தினுடைய சிறப்பு பற்றி

ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம்.  இந்த அத்தி மரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் இதுபோன்ற பழமொழி உண்டு. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.

கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும். இதுபோன்ற அமைப்புகள் உண்டு.

அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு.

அதன்பிறகு, அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , . Bookmark the permalink.

3 Responses to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!

 1. gandhikumar says:

  einnum parikarainggal athur pakkuren.
  udabil sukran, erukum edam ainggu ullathu?

 2. பாலாஜி says:

  காஞ்சி அத்தி வரதர் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் குளத்தில் இருந்து எடுத்து வணங்கபடுவர். 2019 ஆம் ஆண்டு குளத்தில் இருந்து வெளி வர இருக்கிறார்

 3. Sathyamoorthy Umapathy says:

  This is a very precious and valuable information for the modern man/family about “Atthi maram” by the author. Many thanks to the author. I look forward to more such articles here.

Comments are closed.