வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறுவேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

வேதத்தில் உள்ளது நீறு – வேதங்களில் எல்லாம் புகழப்பட்டுள்ளது திருநீறு

வெந்துயர் தீர்ப்பது நீறு – உலகத்தில் எல்லாவிதமான துயர்களையும் தீர்ப்பது திருநீறு

போதம் தருவது நீறு – ஞானத்தைத் தருவது திருநீறு

புன்மை தீர்ப்பது நீறு – நம் குறைகளைத் தீர்ப்பது திருநீறு

ஓதத் தகுவது நீறு – போற்றிப் புகழத் தகுந்தது திருநீறு

உண்மையில் உள்ளது நீறு – என்றும் உண்மையாக நிலைத்திருப்பது திருநீறு

சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே – குளிர்ந்த நீர் வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டுள்ள திருவாலவாயான கூடல் நகரானின் திருநீறே.

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.