மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறுமந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே

மந்திரமாவது நீறு – மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரமாவது திருநீறு.

வானவர் மேலது நீறு – வானில் வாழும் தேவர்கள் எல்லாம் வணங்கி அணிவது திருநீறு.

சுந்தரமாவது நீறு – அழகு தரும் பொருட்களில் எல்லாம் மிகவும் அழகானது திருநீறு.

துதிக்கப்படுவது நீறு – பெரும் பெருமையுடையது என்று எல்லாராலும் துதிக்கப்படுவது திருநீறு.

தந்திரமாவது நீறு – இறைவனை அடையும் வழிகளில் (தந்திரங்களில்) எலலாம் மிகச் சிறந்த வழியாக விளங்குவது திருநீறு

சமயத்திலுல்ளது நீறு – சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில் பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு.

செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே – சிவந்த திருவாயினையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருக்கும் திருவாலவாயான மதுரையம்பதியில் வாழும் சோமசுந்தரக் கடவுளின் திருநீறே.

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.