காண இனியது நீறு கவினைத் தருவது நீறுகாண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

காண இனியது நீறு – அணிந்தவர்களைக் காண இனிமையாக இருக்கும்படி செய்வது திருநீறு

கவினைத் தருவது நீறு – அழகையும் நற்குணங்களையும் தருவது திருநீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு – உளம் விரும்பி பேணி அணிபவர்களுக்கெல்லாம் பெருமையைக் கொடுப்பது திருநீறு

மாணம் தகைவது நீறு – மாண்பைத் தருவது திருநீறு. (உறுதிப்படுத்தும் ஆதாரமாய் (பிரமாணமாய்) அமைவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

மதியைத் தருவது நீறு – நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு

சேணம் தருவது நீறு – விண்ணுலகப்பேற்றையும் உயர்வையும் அளிப்பது திருநீறு. (கடினமான நேரங்களில் மன அமைதியைத் தருவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

திருஆலவாயான் திருநீறே – அது திருவாலவாயாம் மதுரையம்பதியில் வாழும் இறைவனின் திருநீறே

முதல் இரண்டு அடிகள் எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு கடினமாகத் தோன்றியது கடைசி இரு அடிகள். கொடுத்துள்ள பொருள் தவறாக இருப்பின் திருத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.